| தமிழ் நாட்டில் தாய்த் தமிழ் கல்விக்கென ஒரு இயக்கம்
!!! வியப்பாக இல்லையா ? தமிழ் நாட்டில் பிறமொழி ஆதிக்கங்கள் கலாச்சார
சீர்கேடுகள் இவை அனைத்தும் தமிழனின் அடையாளத்தை முற்றிலும் அழித்துவிட்டன
'' தமிழன் என்று சொல்லுடா ! தலை நிமிர்ந்து நில்லுடா '' என்று பாடிய கவிஞன்
இன்று இருந்திருந்தால் தமிழனின் நிலை பார்த்து தலைகுனிந்து வருந்தி இருப்பான்.
ஒரு வரி கூட சுத்தமான தமிழ் பேச எழுத தெரியாத தமிழர்களின் மத்தியில்; கல்விக்கு
பாடுப்பட்ட பெருந் தலைவர் காமராஜர் சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியார்
இவர்களின் மறைவிற்கு பிறகு தமிழகம் ஒரு இருண்ட கண்டத்தில் தள்ளப்பட்டு
விட்டது. பின்னால் மாறி மாறி வந்த ஆட்சியாளார்கள் தமிழை விற்று தமது பிழைப்பை
நடத்தினார்களே அன்றி தமிழ் மொழி வளர்ச்சிக்காக எந்த ஒரு நன்மையும் செய்து
விடவில்லை. தெருக்கள் தோறும் ஆங்கில வழி தொடக்கப்பள்ளிகள். அம்மா
அப்பா என்று வாய் நிறைய அழைக்க வேண்டிய பிள்ளைகள் மம்மி டாடி என்று அழைப்பதைக்
கண்டு பூரித்து போய் நிற்கும் பெற்றோர்கள். தமிழ் வழிக் கல்வியில் படிப்பதே ஒரு கெளரவக் குறைவான
செயலாக தமிழர்கள் மத்தியிலே கருதப்பட்டதுதான் வேதனையிலும் வேதனை. அப்படியே தமிழ் வழியில் கற்பதே நமது குழந்தைகளின் உண்மையான
அறிவு வளர்ச்சிக்கு உதவிடும் என்று நம்புபவர்கள் கூட தரமான தமிழ் வழிக்
கல்வி நிலையங்கள் இல்லாததால் வேறு வழியின்றி ஆங்கில வழிக் கல்வியை நாடும்
கொடுமை. காரணம் அரசுப் பள்ளிகளில் மட்டுமே தமிழ் வழி கல்வி முறை
செயல்படுகிறது ஆனால் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரமும் பிற வசதிகளும் மிகவும்
மோசமான நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் தரமான தமிழ் வழிக் கல்வி நிலையங்களுக்கான
அவசர அவசிய தேவை ஏற்பட்டது. இச்சூழலில்தான் 1990-ல் சென்னை அம்பத்தூரில் தோழர்
தியாகுவால் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற ஏழை மாணவர்களுக்காக ''
தாய்த் தமிழ்ப் பள்ளி '' துவங்கப் பட்டது சமூகத்தில் பிற்படுத்தப் பட்ட
தாழ்த்தப் பட்ட ஏழை மாணவர்களுக்கு தரமான தமிழ்வழி கல்வி தர தமிழ் ஆர்வலர்கள்
ஒன்று கூடி முடிவெடுத்தனர் நாளடைவில் தாய்த் தமிழ் கல்வி பணி தமிழகம் முழுவதும்
20 கிளைகளாக வளர்ந்துள்ளன இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர்
பட்டறை மூலம் தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கான கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது
இந்த பள்ளியில் தொடர்பு மொழியாக ஆங்கிலம் பயிற்றுவிக்க படுகிறது திரு கொளத்தூர் தா செ மணி அவர்களால் 1998-இல் சேலம்
மாவட்டம் மேட்டூர் அணை காவேரி நகரில் திருவள்ளுவர் கல்வி சமூகப் பணி துவங்கப்பட்டு
இன்று ஐந்தாம் வகுப்பு வரை வளர்ந்துள்ளது பள்ளியைச் சுற்றி உள்ள கிராமத்து
ஏழை மாணவர்கள் தரமான கல்வி அறிவு பெறுகின்றனர் பொதுமக்களிடமிருந்து பெறப்படும்
நிதி உதவியால் இப்பள்ளி நாளும் வளர்ந்து வருகிறது. 20000 சதுர அடி சொந்த
இடத்தில் வகுப்பறைகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது நமது தாய்மொழி தமிழ் மூலம் கல்வி புகட்டும் பணி மிக
மிக உயர்வானது பிரான்சு நாட்டு பாரீசு நகரில் செயல் பட்டுவரும் '' சுயமரியாதை
இயக்கம் '' சார்பில் தாய்த் தமிழ்க் கல்வி கட்டிட வளர்ச்சி பணிக்கு நிதி
உதவி வழங்கப்பட்டது. இந்த சீரிய கல்வி பணிக்கு தமிழர்களாகிய நமது சிறு
பங்களிப்புக்கள் ( நிதி உதவி ) அறக்கட்டளை சிறப்பாக செயல்படவும் ஏழை மாணவர்களின்
எதிர்கால கல்வி வளர்ச்சிக்கும் பேருதவியாக இருக்கும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் உலக தமிழர்களாகிய
நமது நிதி உதவிகள் திருவள்ளுவர் கல்வி சமூக பணி அறக்கட்டளையின் வளர்ச்சிக்காக
ஒப்படைக்க படுகிறது. தாராள நிதி உதவி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். |